Friday, September 14, 2018

காலப் பெருநதி.




கரைகளென ஏதுமற்று திசையற்ற பெருவெளியில் 
கணங்களை அலைகளெனக்கொண்டு 
காலப்பெருநதி நிகழ்ந்தோடுகிறது.

அழிந்த நேற்றின் துகள்களைச் சுமந்து 
இருக்கும் இன்றைக் கரைத்தழித்துக்கொண்டு 
நாளையை நோக்கெனக்கொண்டு விரைகிறது அது. 

விண்ணின் மீன்களும் கோள்களும்
 நுரைக்கொப்புளங்களென அதில் தோன்றி மறைபவையே.
அதன் அமைதியில் உருவாகி  மிதக்கும் உயிர்க்குலங்கள்
 அது வெள்ளமென  பெருகுகையில் மூழ்கி அழிகின்றன. 

 எறும்புகளுக்கு இணையாக  யானைகளையும்  
அமிழ்த்தழித்தோடிய திசைதேர்வெள்ளப்பெருக்கொன்றை
காட்சிப்படுத்தி நம் கருத்தில் இருத்துகிறது வெண்முரசு


தண்டபாணி துரைவேல்