ஜெ
போர்க்களக் காட்சிகளை வாசிக்கையில் ஒன்று தோன்றியது. போர்க்களத்தில் காயம்பட்டு விழுந்தால் அதனாலேயே அப்படியே சக்கரங்களிலும் குளம்புகளிலும் சிக்கிச் சாகவேண்டியதுதான். இதை நான் முன்பு யோசித்ததே கிடையாது. வெண்முரசில் கீழே கிடந்தவர்கள் மேல் தான் தேர்கள் செல்கின்றன என்று வருகிறது. அவர்களின் உடல்கள் உடைகின்றன. அவர்கள் அலறிச்சாகிறார்கள். அதுவே போர் என்றால் என்ன என்று காட்டுகிறது. நிற்கும்வரைத்தான் எல்லாம். வீழ்ந்தால் வெறும் சக்கை. அங்கே எந்த நெறியும் நிலைக்கப்போவதில்லை
ஜெயராமன்