அன்புள்ள ஜெ
என்ன காரணத்தால் அர்ஜுனன் இன்னும் தயங்குகிறான்? அவன் கீதை கேட்டு செய்யவேண்டியதென்ன என்று தெளிவுகொண்டுவிட்டான். ஆனால் இன்னும்கூட அவன் ஒரு அறமீறலைச் செய்யவில்லை. அதைச்செய்யாதவரை வெற்றி இல்லை. அதைச்செய்,வெற்றிக்காக எந்த கீழ்மையையும் செய் என்றுதான் அம்பையும் அவள் சகோதரிகளும் வந்து சொல்கிறார்கள். அவனால் அதை இன்னும் செய்யமுடியவில்லை. அந்த எல்லையை மீறவில்லை அவன்
ஆனால் நான் மீறுகிறேன், செய்கிறேன் என்று முடிவெடுக்கிறான் பீமன். ஆகவேதான் அவனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவனை அவர்கள் வாழ்த்தும் வரி முக்கியமான ஒன்று. எழுக! உன் இருளனைத்தும் பெருகுக! . இருளைப்பெருக்கியபின்னாடித்தான் போரிடவே முடியும் அதைத்தான் அம்பை சொல்கிறாள். பீமன் போரிடும்போது எல்லா இருள்தெய்வங்களும் உடன் வந்து நின்றிருக்கின்றன என்று அவனால் உணரமுடியும்
சாரங்கன்