அன்புள்ள ஜெ
ஈரோடு சந்திப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை ஒட்டுமொத்தமாக வாசித்தேன். அவற்றில் கிராதம் பற்றி அருணாச்சலம் மகாராஜன் கட்டுரையும் மதுசூதன் சம்பத் கட்டுரையும் மட்டும்தான் வெண்முரசின் மொத்தமான தத்துவதரிசனம் பற்றிய பார்வையை முயற்சி செய்தன. மற்ற கட்டுரைகள் வெண்முரசின் நுணுக்கங்களைப்பற்றி பேசின. இரண்டு பார்வையுமே தேவைதான். சஞ்சயன் கண்ணாடி வைத்து அணுக்கமாகவும் மொத்தமாகவும் போர்க்களத்தைப் பார்ப்பதுபோலத் தோன்றியது. முக்கியமான ஒரு பார்வையை இக்கட்டுரைகள் அளித்தன. அதாவது நுட்பமாகப் பார்க்கும்போது நுணுக்கம் தெரிந்துகொண்டே இருப்பதுபோலவும் மொத்தமாக விலகி நின்றுபார்த்தால் ஒரு பெரிய கட்டுமானமாகவும் வெண்முரசு தெரிகிறது. இது அழகான ஒரு கோயில் போல என்று சொல்லலாம்
ராகவன்