எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து அவர் காலடியில் தலைவைத்து வணங்கினேன் என்றவரியை சுட்டிக்காட்டி என் நண்பர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் அந்த வழக்கம் என்ன, அந்த எட்டு உறுப்புகள் என்ன என்று கேட்டிருந்தார். அது வரை நானும் அதை கவனிக்கவில்லை. சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதைத்தான் அப்படி மொழியாக்கம் செய்திருக்கிறார் என்று அவர்க்கு நான் பதில் எழுதினேன். ஸ +அஷ்ட +அங்கம் எட்டு உறுப்புகளும் படிய வணங்குதல். நெற்றி ,இரு கைகள், மார்பு நெஞ்சு வயிறு தொடை கால் என்பது அந்த உறுப்புகள் என விளக்கி எழுதினேன். நல்ல சொல்லாட்சி ஜெ
சாரங்கன்