ஜெ
வெவ்வேறுவகையான படைவியூகங்களைப்பற்றி
வாசிக்கையில்தான் மகாபாரதப்போரை பிரம்மாண்டமாக மனதில் தீட்டிக்கொள்ள முடிகிறது. திரும்பத்திரும்ப
இருகூட்டமும் நேருக்குநெர் அம்புகளும் விற்களுமாக ஓடிப்போய் மோதுவதும் அம்புகள் பறந்து
முட்டுவதும்தான் போர் என்று சினிமாவிலும் டிவியும் காட்டுகிறார்கள். வியூகங்கள் எதற்கு
என்றால் வெற்றிகரமான ஒரு எந்திரம்போல அந்த படையை ஆக்குவதற்குத்தான். நாரையின் கழுத்து
எப்படியெல்லாம் செயல்படுகிறது என்று பார்ப்பது மிக ஆச்சரியமானது. அதை உடைக்க பீமன்
செய்யும் உக்கிரமான முயற்சியும் அபாரமாக உள்ளது
மகேஷ்