Saturday, September 22, 2018

போர்க்களமும் இசையும்



ஜெ

வெண்முரசை வாசிக்கும்போது இந்தப்பிரம்மாண்டமான கதைப்பரப்பில் இல்லாத எண்ணங்களே இல்லையோ என்ற உணர்ச்சியைஅ டைந்தேன். வெண்முகில்நகரம் நாவலில் இந்தப்பகுதியை வாசித்தேன்.

விழிகளை இழந்தவர்கள் நினைவுகளை எப்படி கையாள்கிறார்கள்? அவனுக்கு திருதராஷ்டிரர் ஓயாது இசைகேட்பது நினைவுக்கு வந்தது. இந்த வானை ஒளியை அலைநீர்வெளியை வண்ணங்களை நிழலாட்டங்களை நிகர்செய்ய எவ்வளவு இசை தேவை? 

இந்த வரியின் அழகில் மூழ்கி அமர்ந்திருந்தேன். இன்று திருதராஷ்டிரர் என்ன செய்கிறார்? அவர் இசையை இழந்துவிட்டார். அந்த இடத்தை நிரப்ப இவ்வளவு பெரிய போர்க்களம் அவருக்குத்தேவைப்படுகிறது. இவவ்ளவு காட்சிகள் இருந்தாலும் போதவில்லை அதெல்லாம் என்று இருக்கிறது

மகேஷ்