அன்புள்ள ஜெ
வெண்முரசு ஒரு இந்தியச்சித்திரத்தை
ஆரம்பம் முதலே உருவாக்க முயல்கிறது. வியாசர் பாரதத்தின் முதல்விதையை கன்யாகுமரியில்
இருந்து பெற்றார் என ஆரம்பிப்பதே அதற்காகத்தான். பிள்ளையார் எடுத்துக்கொடுக்க அவர் எழுதுகிறார்.ஆசேதுஹிமாசலம் என ஆரம்பிப்பதுபோல.
வியாசரும் ஒரு தென்னிந்தியக் கவிஞரும் சந்திக்கும் இடமும் அதேபோல முக்கியமான ஒன்று.
அதன்பிறகு இளநாகனின் பயணம் வழியாக இந்தியாவே காட்டப்பட்டது. அதன்பின் அர்ஜுனனின் பயணங்கள்
வழியாக இந்தியா விரிவாக வந்தது. இப்போதுபோரில் ஏராளமான அரசர்கள் காட்டப்படுகிறார்கள்.
போரில் பங்கெடுப்பவர்க்ள் வழியாக இந்தியா விரிவாக வருகிறது. இந்தியாவின் அரசியலின்
ஒரு பெரிய வரைபடத்தை இந்நாவலை கொண்டு நாம் கொஞ்சம் கற்பனைசெய்து உருவாக்கிக்கொள்ளமுடிகிறது.
மயிலாடுதுறை பிரபு இந்தியாவைப்பற்றி வெண்முரசில் உள்ள பகுதிகளைத் தொகுத்து அளித்திருந்தார்.
சிறப்பாக இருந்தது