Monday, September 10, 2018

அஸ்தினபுரி



ஜெ

போர் நிகழ்ந்துகொண்டிருக்கும் இப்போது எனக்கு பழைய காட்சிகளில் பெரும்படிமங்களாக ஞாபகம் வருபவை இரண்டு. ஒன்று ருத்ரர்கள் குருதித்துளி பெற்று கண்விழிப்பதும் அவர்கள் ரத்த மழையாக அஸ்தினபுரிமேல் பொழிவதும். இன்னொன்று அங்கே கூர்மைகொண்டு காத்திருக்கும் அந்த கைவிடுபடைகள்.

இன்னொன்றும் ஞாபகம் வந்தது. மழைப்பாடலில் வரும் அந்த பெரிய வெள்ளம். அது அஸ்தினபுரியை மூழ்கடிக்கும் காட்சி. அவையெல்லாம் போரின் அழிவின் குறியீடுகளாக பெரிய வடிவம் கொள்கின்றன இப்போது’


ஆர்.ராதாகிருஷ்ணன்