ஜெ
வெண்முரசில் சுஜயன் மீண்டும் தோன்றுவான் என நான் நினைக்கவேயில்லை. அவன் பயம் நிறைந்தவனாக காண்டீபம் நாவலில் வருகிறான். அர்ஜுனனை நினைத்து கதைகளைக் கேட்டு அவனுடைய அந்த பயம் இல்லாமலாகிறது. அவன் அந்த நாவலின் கதைமையம் அல்ல. அவன் ஒரு தொடக்கம் மட்டும்தான். ஆகவே அங்கேயே முடிந்துவிடுவான் என நினைத்தேன். இங்கே அவன் ஒரு வீரனாக தோன்றுவது ஒரு சிறு அதிர்ச்சியை உருவாக்கியது. அவன் ஆச்சரியமாக முதிர்ச்சியானவனாக தென்படுகிறான். அவனுடைய நினைவுகளில் காண்டீபத்துடன் அர்ஜுனன் எழுவது ஒரு காவியத்தன்மையைக் கொண்டிருக்கிறது
எஸ்.ராஜேந்திரன்