Thursday, September 6, 2018

கிராதன்


கீழ்க்கண்ட வரிகளில் கிராதம் நாவலை ஆழமாக நோக்கி சுருக்கித்தந்திருக்கிறார் அருணாச்சலம்

தான் அறிந்த அனைத்தும் அளிக்கும் அச்சத்தில் இருந்து விடுபடும் ஒருவனை அவனுக்கும் தெரியாமல் கட்டியிருக்கும் ஒரு விழியறியா தளையொன்றை எரித்து நீறாக்கும் கொடுஞ்சினத்தொடு அவனுள் இருக்கும் காட்டில் இருந்து உருத்திரட்டி வரும் உருத்திரனைப் பற்றிய சித்திரமே கிராதத்தின் முதல் வரி. அப்படிப்பட்ட ஒருவனைச் சந்தித்து மீள்வது என்பது மரணமடைந்து புத்துயிர்ப்பது போன்றதே!! இவ்வாறு அச்சத்தை அறுத்து, தளைப்பனவற்றை எல்லாம் விலக்கி, விலக்கி தன் முன் வரும் உருத்திரனைச் சந்திந்து பாசுபதத்தை பெற்று மீளும் அர்ச்சுனன் பற்றியது தான் இந்நாவல் என்பது அவ்வரிகளின் கனத்தை மேலும் மேலும் அதிகரிக்கிறது.

அர்ஜுனன் கடைசியில் பாசுபதம் பெறுவதில்தான் நாவல் முடிவடைகிறது. தொடக்கம் அந்த பாசுபதனே கிராதனாக வருவதில் இருக்கிறது. அர்ஜுனன் தன்னுள் இருக்கும் அச்சம் காமம் போன்றவற்றை அறுத்து பாசுபதத்தை வாங்குவதுதான் நாவல். பாசுபதத்தை அவன் போரில் பயன்படுத்தவில்லை.ஏனென்றால் அது போர்க்கருவியே அல்ல. அது ஒரு ஞானம். தன்னை விடுவிக்கும் மெய்ஞானம் மட்டும்தான்.

ஆர்.சுரேஷ்குமார்



கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்