Friday, December 4, 2015

துவாரகை



ஜெ

துவாரகையின் சித்திரம் மனதில் ஆழ்மாகப் பதிந்துவிட்டது. அதன் அத்தனைத் தெருக்களும் சந்துபொந்துகளும் எல்லாம் தெரிந்தமாதிரி இருக்கிறது. சுபத்திரை தேரை ஓட்டிக்கொண்டுபோகும்போது அந்த வேகத்திலும் நகரம் எனக்கே தெளிவாக நினைவில் இருந்ததை நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டேன். இல்லாத ஒரு நகரத்தை இப்படி துல்லியமாக உருவாக்குவதென்பது சாதாரணமான கற்பனை அல்ல

நுணுக்கமான தகவல்கள். தோரணவாயில். அதன்பின்னர் கோட்டைவாயில். அதன்பின்னர் நீளமான சாலை. அதிலிருந்து ஒரு கிளைபிரிந்து துறைமுகம் போகிறது. அதன் ஒருபக்கம் பண்டகசாலைக்குப்போகும் தனி பாதை. ஊழியர் குடியிருப்புகள். சாலை நேராகச்சென்று குன்றில் ஏறுகிறது. மேலே நகரம் ஸ்பைரல் வடிவில் . அதன் இன்னொரு குன்றில் ஒரு வாசல் மட்டும்தான்

இந்திரநீலம், காண்டீபம் இரண்டுமே துவராகையை பிரம்மாண்டமாக உருவாக்கிக் காட்டிவிட்டன

ஜெயச்சந்திரன்