ஜெ,
துவாரகையில் வாழ்ந்து வந்ததுபோல ஓர் உணர்வு. இனிமேல் இந்திரப்பிரஸ்தத்தில் வாழப்போகிறோம். அஸ்தினபுரி நினைவாக மாறிவிட்டது
முன்பு ஒரு கட்டுரையில் கிருஷ்ணமதுரம் என எழுதியிருந்தீர்கள். இப்போது தெரிகிறது அதன் தாத்பரியம். இங்கே துவாரகையில் அத்தனைபேரும் கிருஷ்ணாம்ருதம் உண்டு களியாடிக்கொண்டே இருக்கிறார்கள்
எப்போதுமே கலைகளால் கொண்டாட்டங்களால் ஒலித்துக்கொண்டே இருக்கும் நகரமாக நீங்கள் துவராகையைக் காட்டுகிறீர்கள். மண்ணில் அப்படி ஒரு நகரம் ஒருவேளை இல்லாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால் இருந்தது என்று நினைப்பதற்கே உற்சாகமாக இருக்கிறது
பிரபாகர்