Wednesday, December 2, 2015

இருமுனிவர்கள்




ஜெ

வெண்முரசை வாசித்துக்கொண்டிருக்கும் அனுபவம் என்பது குறுக்கும் நெடுக்குமாக நாமே சில தொடர்புகளை உருவாக்கிக்கொள்வதுதான். பராசரமுனிவர் சத்யவதியை காதலில் வீழ்த்தினார். அதன் விளைவாக ஒரு பெரிய வம்சகதை ஆரம்பித்தது

அதற்கு முன்னரே விஸ்வாமித்திரரை மேனகை காதலில் வீழ்த்தினாள். அது பரதகுலத்தை உருவாக்கியது. அர்ஜுனனை பரதகுலத்தவன் என்றுதான் சொல்கிறார்கள்.

ஆக ஆணும் பெண்ணும் மாறிமாறிக்கொள்ளும் காதலின் நாடகமே உலகநிகழ்வாக ஆகிறது. இதை ஒரு இயற்கைநியதி என்றே சொல்லமுடியும் என்று நினைத்துக்கொண்டேன்

இந்த இடைவெளியில் பழைய நாவல்களை புரட்டிக்கொண்டிருப்பதே என் வேலை. நீங்கள் எழுத ஆரம்பிப்பதுவரை எங்களுக்கு வேறு எதையும் வாசிக்க ஓடாது

நன்றி

வேணுகோபால்