Monday, December 7, 2015

கேவலம்



ஜெ

ஐந்து முதலைகளின் கதையை பார்த்துக்கொண்டிருந்தேன். ரைவதகர் , நேமி ஆகியோர் கிளம்பிச்சென்றார்கள் என்று வாசித்ததுமே மீண்டும் திரும்பிச்சென்று அவர்களும் இந்த பிராஸஸ் வழியாகச்ச்சென்றிருப்பார்கள் என்று வாசிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். ஐந்துமுதலைச் சுனைகளிலும் பிராணனாகிய அன்னை வந்து நின்று வெவ்வேறு முகம் காட்டுகிறாள். கடைசியாக முக்தி

நேமிக்கு அந்த அன்னையாக வருபவள் ராஜ்மதியாக இருப்பாள் என ஒரு எண்ணம் வந்தது. இப்படி பல வகைகளில் பின்னால் சென்று பலவற்றை வாசிப்பதற்கும் விரிவாக்கம் செய்வதற்கும் காண்டீபத்திலே இடமிருக்கிறது

இந்நாவலின் ground என்பது இந்த யோகஞானம் தான் என நினைக்கிறேன். இதைப்பற்றி எங்கள் யோகவகுப்பிலே கூட் பேசிக்கொண்டோம்

பார்த்தசாரதி