Monday, December 7, 2015

வன்முறையின் வழியே



ஜெ,

வெண்முரசு முழுக்க வந்துகொண்டிருக்கும் வன்முறைக்காட்சிகள் எனக்கு வாசிப்பில் பெரிய பதற்றத்தைக்கொடுத்துக்கொண்டே இருந்தன. காண்டீபத்திலே ரைவதகர் போராடும் காட்சியின் உச்சகட்ட வன்முறை ஒரு பக்கம் என்றால் அந்த பாலைவனக்குளத்திலே நீருக்காக வந்தவர்களை வெட்டி வீழ்த்தும் இடம் இன்னொரு பக்கம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அகிம்சை வடிவான ரைவதகரை வழிபட ரைவத மலைக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியிலே இந்த வன்முறை வெறியாட்டம்

ஒரு குலம் இன்னொன்றை அழிப்பது வெண்முரசில் வந்துகொண்டே இருக்கிறது. சித்ராங்கதையின் நாட்டில் நடப்பதும் அந்த கொலையாட்டம் தான். இது அன்றுமின்றும் நடந்துகொண்டிருக்கிறது. இன்றைக்கு சிரியா ஈராக்கில் நடப்பதும் இதுதான். மனிதகுலம் இதைவிட்டு இன்றுவரை மேலே வந்ததே இல்லை என்று நினைக்கிறேன்

அப்படிப்பார்க்கையில் கீதை எந்த வரலாற்றுச்சூழலில் நின்று பேசிக்கொண்டிருக்கிறது என்பதைப்புரிந்துகொள்ளமுடிகிறது. ரத்தம் காயாத மண்ணிலே நின்று கீதை சொல்லப்பட்டிருக்கிறது. காண்டீபம் உண்மையில் கீதையின் பிரிமிஸை சரியாக விளக்கக்கூடிய நாவல் என நினைக்கிரேன்

சிவம்