ஜெ
அடுத்த நாவலுக்காகக் காத்திருக்கிறோம். மீண்டும் மகாபாரத மையக்கதைக்குள்ளே செல்வீர்கள் என நினைக்கிறேன். அர்ஜுனனையும் கிருஷ்ணனையும் பெரிய கதாபாத்திரங்களாக இந்த இருநாவல்களும் நிறுவிவிட்டன. இதுவரை இந்த இருவரும் வீ\ரர்கள் என்றே தெரிந்தனர். இப்போதுதான் இவர்களை ஞானத்தேடல் கொண்டவர்கள், யோகிகள் என்று வாசித்துக்கொள்ள முடிகிறது.
அவ்வகையில் மொத்த வெண்முரசும் கீதையை நோக்கிச்சென்றுகொண்டிருக்கிறது என நினைக்கிறேன். கீதைக்குள் சென்று செர்ந்தால்தான் முழுமை. அதுதானே மகாபாரதத்தின் சாறு. ஆனால் சும்மா அது வரக்கூடாது. அதற்கான எல்லா சந்தர்ப்பங்களும் அமைய வேண்டும். அர்ஜுனனின் தேடல். அவன் அகிம்சை வரை சென்று விட்டு மீண்டும் காண்டீபம் எடுப்பது ஆனால் அதன்பின் காணும் கொலைக்களம்- இதெல்லாம் இப்போதே கண்ணுக்குத்தெரியத்தொடங்கிவிட்டது
கேசவன் ஆர்