Saturday, September 1, 2018

வாசிப்பின் எண்ணற்றசாத்தியங்கள்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

ஈரோடு வெண்முரசு சந்திப்பில் கலந்து கொண்டு திருப்பிய பின் ஓர் இனிமையான உணர்வில் இருந்தேன்.  கலந்துகொண்ட அனைவருமே வெண்முரசை ஆர்வத்துடன்ஈடுபாட்டுடன் வாசிப்பவர்கள்இயல்பாகவே அச்சந்திப்பின் மீதுஅதன் மையமான வெண்முரசு பற்றிய எண்ணங்கள் மீது மிகுந்த  கவனம் கொடுப்பவர்கள்.  வாசிப்பின் எண்ணற்றசாத்தியங்கள் வியப்பைத் தருகிறது.  நான் வாசிப்பது எனது மட்டுமேமற்றொருவரின் வாசிப்பை அறியும் போதுஅதுவும் எனதாகிறதுவாசிப்பு அவ்வாறே விரிவடையபடைப்பு அதனினும் மேலாக பிரமாண்டத்துடன் விரிவடைந்துசெல்கிறது.  ஆனால் வெண்முரசு போன்ற ஒரு படைப்பிற்கு மட்டுமே இது சாத்தியம்.  எளிய வணிகப் படைப்புகள்எத்தனை பேர் வாசித்தாலும் இவ்வளவுதான் சொல்லிவிடத்தக்கவை.

வெண்முரசில் பிற இலக்கியங்களை நினைவுபடுத்துபவைபிற இலக்கியங்களில் இருந்து எடுத்துகாட்டப்பட்டவை பல.  அதில் வியப்பொன்றுமில்லை அது அவ்வாறுதான் இருக்கமுடியும்.  இந்திய பண்பாட்டின் ஒட்டுமொத்தமாக எழுவதுவெண்முரசு அதன் அத்தனை அம்சங்களையும் தன்னுடன் இணைத்துக்கொள்வது.

பாரதியின் பாஞ்சாலி சபதத்தை வெண்முரசுடன் ஒப்பிட்டு நோக்கியது சில எண்ணங்களைத் தோற்றுவித்ததுபாஞ்சாலிதுகில் உரியப்படும் காட்சிகள் நாடகத்திற்கானவை என்றபோதும் வெண்முரசின் நாடகம் உயர்ந்து நிற்கிறது.  அங்கேஅவள் காத்தருளுமாறு கண்ணனைக் கோருகிறாள்ஹரி ஹரி என்கிறாள்.  அவன் காக்கும் கடவுள்அருள்கிறான்.  இதுஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி அல்ல ஒட்டுமொத்த பெண்மைக்கே சிறுமை செய்வது என்றுவலியுறுத்த "பராசக்திஎன்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் பாரதி.  மக்களிடம் இருக்கும் பக்திப்பூர்வமானஉணர்வுகளை பயன்படுத்திக் கொள்கிறார்.  மாறாகவெண்முரசில் அங்குள்ள பெண்டிர் அனைவரும் தாங்கள்மேலாடைகளை அவளை நோக்கி வீசுகின்றனர் என்று பெண்களின் உணர்வுகளின் வழியாக ஒட்டுமொத்த பெண்மையையும் சிறுமை செய்வது இது என இயல்பாகவே அங்கு பராசத்தி எழுகிறாள்.  அத்துடன் உலகப்பொதுமையாக உணர்த்தும் சாத்தியம் கொண்டது.  இங்கு சமய பண்பாட்டு புரிதல், "பராசக்தி"யை அறிந்திருத்தல் என்பதுஅவசியத் தேவை அல்ல.  அவை இல்லாமலே அவ்வுணர்வுகள் பெறப்படும்.


பாஞ்சாலி சபதத்தில் இறைவன் கண்ணன் அருள வேண்டி அவன் பேர் சொல்கிறாள்.  இங்கு வெண்முரசில்இத்தருணத்தில் பெண்கள் அவன் பேர் சொல்வதன் அவசியம் என்னஅவன் ஒருவன் மட்டுமே ஆண் என்ற ஆணவம்அற்றவனாக பெண்களின் மீது தூய அன்பு கொண்டவன் என்பதாலாஇது ஏற்கத்தக்கதாக இல்லை.  அல்லது அங்குஎல்லா பெண்களும் தங்கள் ஆழத்தில் அவனைக் காதலிப்பவர்கள் ? இதுவும் ஏற்கத்தக்கது அல்ல.  உண்மையில்எனக்குத் தோன்றுவது அன்னை அனுசுயா மூன்று முதன்மைத் தெய்வங்களையும் குழந்தைகளாக்கி ஆடை துறந்ததுபோன்றது இது.  கண்ணன் அனைத்து பெண்களுக்கும் குழந்தைமேலும் அவன்மட்டுமே பிரபஞ்சத்தின் ஒரே ஒரு ஆண்எனவே எல்லா ஆண்களுமேசிறுமை மிகுந்த கயவர் உட்பட ஒருவகையில் கண்ணன்களே.  ஒட்டுமொத்தமாகஆண்களின் அத்தனை சிறுமைகளுக்கும் முன்னர் எதிர் நிற்க பெண்மையின் உச்சபட்ச வழி பேரன்னை என எழுந்துஅவர்கள் அனைவரையும் குழந்தைகள் எனச் செய்து விடுவதுதாங்கள் கௌரவர் முன்போ பாண்டவர் முன்போ அல்லகண்ணன் முன்பு எம் குழந்தைகள் முன்பு என்று.  உண்மையில் பெண்மையின் உச்சம் தாயாகவே நிற்கமுடியும்.  அல்லாமல் ஒரு சைனீஸ் படக்காட்சிப் போல அப்பெண்கள் ஆளுக்கொரு வாளை எடுத்துக் கொண்டு பாய்ந்திருக்கமுடியும்பராசக்தி தோன்றுவாள்என் விருப்பமும் அவ்வாறே.  ஆனால் அது பெண்மையின் செயல் அல்ல தேவிபாகவதத்தில் மகிஷன் முன் நிற்கும் பராசக்தி அவனிடம் சொல்வாள் "என்னை பெண்ணனென்று நினைக்கிறாய்.  நான்பெண்ணல்ல ஆண்."


அன்புடன்
விக்ரம்
கோவை