கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்
அன்புள்ள ஜெ
கிராதம் பற்றிய அருணாச்சலம் மகாராஜனின் கட்டுரை மிகச்சிறப்பான ஒன்று. சமீபத்தில் எந்த நூலைப்பற்றியும் இப்படி முழுமையான பார்வையுடன் இத்தனை விரிவாக ஒரு கட்டுரை எழுதப்பட்டதில்லை. இக்கட்டுரையின் சிறப்பு என்பது அந்நாவலுக்கு தன்னை முழுமையாக ஆட்படுத்தி வாசிப்பதுதான். ஏற்கனவே தனக்குத்தெரிந்ததையே அதில்்் வாசிக்காமல் புதியவற்றை நோக்கிச் செல்வதுதான்
அதோடு இந்நாவலைப்பற்றிய விமர்சனம் வெண்முரசு நாவல்தொடர் பற்றி ஒட்டுமொத்தமான விமர்சனமாகவும் இருக்கிறது. பின்புலத்திலே வைத்துப் பார்க்கமுடிந்திருக்கிறது. கிராதம் அர்ஜுனனுன் ஞானத்தேடலும் அலைக்கழிப்பும். வேதங்கள் உருவான அடுக்குகள் ஆகிய இரண்டு முகங்கள் கொண்டது. அது சைவ நாவல். ஆகவே வேதமுதல்வனாக உமையுடன் அமர்ந்த சோமாஸ்கந்தரிலே சென்று முடிகிறது. அதை மிகச்சிறப்பாக விளக்கியிருக்கிறார்
எவ்வளவு ஆழமான முறையில் கிராதம் நாவலையும் வெண்முரசையும் வாசித்திருக்கிறார் என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது
செல்வன்