Sunday, December 6, 2015

வன்முறையின் உச்சியில்



ஜெ

மீண்டும் நாவல் கீதையைநோக்கிச்செல்கிறது என்று நினைக்கிறேன். நேமி மனம்திரும்பும் காட்சியே கீதைதான். அந்தக்காட்சியைத்தான் மீண்டும் அர்ஜுன விஷாதயோகத்திலே காணப்போகிறோம். அதற்கு கிருஷ்ணன் சொல்லப்போகும் பதிலைத்தான் அதற்கு முன்னரே நாம் அந்த பாலைவனச்சோலையிலே பார்த்தோம். எல்லாரும் ஒரு துளி ரத்தம் குடித்தவர்கள்தான் என. ரத்தம் குடிக்காமல் எவரும் வாழமுடியாது என்று கிருஷ்ணன் சொல்வது போல

இந்த நாவலில் கிருஷ்ணனும் நேமியும் எதிர் எதிராக நிறுத்தப்பட்டிருப்பதே பின்னர் கீதையில் மீட்டு எடுப்பதற்காகத்தான் என நினைக்கிறேன். அகிம்ஸோ பரமோ தர்ம: என்று சொன்ன ஒரு மரபுதான் இந்துமதம். அப்படி இருக்கையில் அந்தப்பெரிய கொலைக்களத்தை நியாயப்படுத்தும் தத்துவம் என்ன என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கப்போகிறது.

இந்த நாவலை மிக நன்றகா நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் ஒட்டுமொத்தமாக மகாபாரதம் என்னும் பசுவின் பாலாகிய கீதையை நன்றாகப்புரிந்துகொள்லமுடியும் என நினைத்தேன்.


சுந்தரம்